எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த சீரியலில் தர்ஷனுக்கு அன்புக்கரசியை திருமணம் செய்துவைக்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வரும் ஆதி குணசேகரனிடம், தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்ற ஈஸ்வரி. அவரின் ஆணாதிக்கத்தைப் பற்றி ஆக்ரோஷமாக பேசி, அவர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கிறார். மேலும் தர்ஷன் - அன்புக்கரசி திருமணத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார். இதனால் ஆத்திரம் அடையும் ஆதி குணசேகரன், ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார். பின்னர் மயக்கம் அடையும் ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்.
24
ஈஸ்வரியின் உடல்நிலை எப்படி உள்ளது?
மறுநாள் காலையில் தான் ஈஸ்வரி அறையில் மயங்கிக் கிடப்பதை பார்க்கிறார் நந்தினி. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கதிர், கரிகாலன் என யாரும் முன்வராத நிலையில், தர்ஷனும், தர்ஷினியும் ஈஸ்வரியை ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார்கள். அதனுடன் நேற்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில், ஈஸ்வரியை பரிசோதித்த டாக்டர், அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ஜனனி, எப்போ சுயநினைவு திரும்பும் என கேட்க, அது என்னால் சொல்ல முடியாது என டாக்டர் சொன்னதும் கதறி அழுகிறார் தர்ஷினி.
34
கைவிரித்த டாக்டர்
தன்னால் முடிந்ததை செய்வதாகவும், ஆனால் ரிசல்ட் என் கையில் இல்லை என்று டாக்டர் கைவிரிக்கிறார். இதனால் குடும்பத்தினர் பதறிப்போகின்றனர். மறுபுறம் என்னால் தான் இப்படி ஆனது என ரேணுகாவிடம் கதறி அழுகிறார் நந்தினி. நீங்க வீட்ல இல்லாத நேரம் நான் தான் அக்காவை பார்த்திருக்கனும், என்னோட கவனக் குறைவால் தான் இப்படி ஆனது என நந்தினி கூற, அவரை ஜனனியும், ரேணுகாவும் சமாதானப்படுத்துகிறார்கள். அம்மாவுக்கு என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று இருந்தேன். ஆனால் இப்போ ரொம்ப பயமாக இருக்கிறது என தர்ஷினி, தர்ஷனிடம் புலம்புகிறார்.
ஈஸ்வரி காப்பாற்றப்படுவாரா? ஈஸ்வரியின் இந்த நிலையால், தர்ஷன் - அன்புக்கரசியின் திருமணத்துக்கு தடை ஏற்படுமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும். இந்த பரபரப்பான கட்டத்தில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம் பார்கவி படிப்புக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்து வரும் ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி ஜனனி சொல்லவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஜீவானந்தமும் - ஈஸ்வரியும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் காதலை எதிர்த்து தான் ஆதி குணசேகரனுக்கு ஈஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர்.