விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், போலீசில் சிக்கிய ரோகிணியை முத்து - மீனா மீட்டு அழைத்து வந்த நிலையில், தற்போது புது பிரச்சனையில் சிக்கி உள்ளார்.
விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து - மீனாவாக வெற்றி வஸந்த் மற்றும் கோமதிப் பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த வாரம் தீபனின் வீட்டில் நடந்த பிரச்சனையின் போது முத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் பிரச்சனைக்கு காரணமான ரவுடிகளை பிடித்து மீனா போலீசில் ஒப்படைக்க, அவர்கள் ரோகிணி தான் தங்களை அவ்வாறு செய்ய சொன்னதாக உண்மையை உளறிவிடுகிறார்கள். இதையடுத்து ரோகிணியை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ரோகிணியை காப்பாற்றும் முத்து மீனா
ரோகிணியை போலீசார் கைது செய்ததால் அவர் சிறைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீனா - முத்து இருவருமே போலீசிடம் பேசி, ரோகிணியை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி விடுகிறார்கள். மறுபுறம் கிருஷ், ரோகிணிக்காக கோவிலுக்கு சென்று சாமி முன் எமோஷனலாக அழுது கொண்டிருக்கிறான். கிருஷ் வீட்டைவிட்டு தொலைந்து போனதால், அவனை தேடி அண்ணாமலையும், ரவியும் செல்கிறார்கள். அப்போது அவன் கோவிலில் இருப்பதை இருவரும் கண்டுபிடிக்கிறார்கள். அவனிடம் இங்க எதுக்குடா வந்த என அவர்கள் கேட்கும்போது அவன் சொன்ன பதில் இருவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
34
கிருஷால் ரோகிணிக்கு வரும் சிக்கல்
அவன் என்ன சொன்னான் தெரியுமா... அம்மா ஜெயில்ல இருக்காங்க, அவங்க வெளிய வரணும்னு சாமி கிட்ட வேண்டிட்டு இருந்தேன்னு கிருஷ் சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன அண்ணாமலையும், ரவியும் என்னது ரோகிணி உனக்கு அம்மாவா என கேட்கும்போது, இல்ல ஆண்ட்டி என மழுப்புகிறான் கிருஷ். பின்னர் அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன்பின்னர் ரோகிணி வீட்டுக்குள் எண்ட்ரி ஆகிறார். அவரைப் பார்த்ததும், கிருஷ் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அம்மா என சொல்ல வந்து பின்னர் உஷாராகி ஆண்ட்டி என அழைப்பான். அதைப்பார்த்த ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே ரோகிணி மேல் டவுட்டு வருகிறது.
பின்னர் உன்னால் தான் எல்லா பிரச்சனையும் என விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை, அவருக்கு நிறைய அட்வைஸ் செய்கிறார். இதனால் விஜயா மனம் மாறிவிட்டதாக தெரிகிறது. கைதில் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த ரோகிணி தற்போது கிருஷால் புது சிக்கலில் சிக்கி இருக்கிறார். கிருஷ், ரோகிணியின் மகன் என்கிற உண்மை வெளியே வருமா? அது தெரிந்தால் என்ன ஆகும்? என்கிற விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சிறகடிக்க ஆசை சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதில் வேறு என்னென்ன ட்விஸ்டெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.