ஆனந்திக்கு கல்தா; வேறு பெண்ணுடன் அன்புக்கு திருமணம்! சிங்கப்பெண்ணே சீரியலில் செம சம்பவம் வெயிட்டிங்

Published : Aug 04, 2025, 09:53 AM IST

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை உயிருக்கு உயிராக காதலிக்கும் அன்புவுக்கு வேறு திருமணம் செய்ய வேலைகள் நடக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Singappenne Serial Today Episode

தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது சிங்கப்பெண்ணே. சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மனிஷா மகேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் ஆனந்தி கதாபாத்திரத்தை அன்பு மற்றும் மகேஷ் இருவரும் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆனந்திக்கு அன்பு மீது ஈர்ப்பு வந்ததும் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதல் வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆனந்தி திடீரென கர்ப்பமானதால் புது பிரச்சனை உருவானது. இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
ஆனந்தி எடுக்கும் அதிரடி முடிவு

ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதே தெரியாது என சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளாத சுயம்பு, பஞ்சாயத்தைக் கூட்டி, ஆனந்தியை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க திட்டம்போட்டார். ஆனால் பஞ்சாயத்தில் ஆனந்திக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன்படி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை ஆனந்தி கண்டுபிடித்து சொல்ல உத்தரவிடுகிறார்கள். இதனால் ஆனந்தியை கர்ப்பமாக்கியது யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்க ஆனந்தியின் குடும்பத்தார் களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் ஆனந்தி தான் மட்டும் தனியாக சென்று அவனை கண்டுபிடிக்கிறேன் என சொல்கிறார்.

34
அன்புவுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு

தான் உண்மையை கண்டுபிடிக்கும் வரை நீங்க இந்த ஊர்ல இருக்கணும், நீங்களும் என்னுடன் வந்தால் ஊரைவிட்டு ஓடிப்போய்ட்டோம்னு ஊர்காரர்கள் இன்னும் கேவலமாக பேசுவார்கள் என தன் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவர்களை ஊரில் விட்டுவிட்டு தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யார் என்பதை கண்டுபிடிக்க சிங்கப்பெண்ணாய் கிளம்புகிறார் ஆனந்தி. மறுபுறம் அன்புவின் தாய், அன்புவுக்கு திருமணம் செய்துவைக்கும் வேலையில், இறங்குகிறார். வருகிற முகூர்தத்தில் உனக்கும் துளசிக்கும் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக அவர் சொன்னதைக் கேட்டு ஷாக் ஆகிறார் அன்பு.

44
அன்புவை திருமணம் செய்ய முனைப்பு காட்டும் துளசி

தன் தாயின் இந்த செயலால் அதிருப்தி அடையும் அன்பு, உங்க புள்ளையோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான இதெல்லாம் செய்றீங்க. அதுக்கு உங்க புள்ள இருந்தா தான என சொல்லிவிட்டு தற்கொலை முடிவுடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் அன்பு. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் துளசி, யாரோ ஒருத்தனோட கருவை வயிற்றில் சுமக்கும் பெண், மாமாவை கட்டிக்க நான் எப்படி சம்மதிப்பேன் என ட்விஸ்ட் கொடுக்கிறார். இதனால் அன்புக்கு துளசி உடன் திருமண நடக்குமா? ஆனந்தி உண்மையை கண்டுபிடித்தாரா? என அனல் பறக்கும் எபிசோடுகள் இனி வர உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories