விஜய்யை விட்டு பிரியும் காவேரி... காரணம் விதியா? சதியா? மகாநதி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

Published : Aug 04, 2025, 01:17 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யை விட்டு பிரிய முடிவெடுத்துள்ளார் காவேரி. இதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Mahanadhi Serial Today Episode

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்குகிறார். இதில் விஜய் - காவேரியாக ஸ்வாமி மற்றும் லட்சுமி பிரியா நடிக்கிறார்கள். இந்த சீரியல் இளசுகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அம்மா வீட்டில் இருக்கும் காவேரியை அழைத்து செல்ல வரும் விஜய்க்கு, குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
மகாநதி சீரியல் இன்றைய எபிசோடு

காவேரியை கூட்டிட்டு போக வந்த விஜய்யை உங்களோடு அனுப்ப முடியாது என காவேரியின் பாட்டி, சித்தி ஆகியோர் சண்டை போடுகின்றனர். இதற்கெல்லாம் செவிசாய்க்காத விஜய், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் காவேரி, என்னால உங்க கூட வந்து வாழ முடியாது என சொல்கிறார். அதற்கு விஜய், வாய மூடுடி.. உன்னோட இஷ்டத்துக்கு என்னால முடிவெடுக்க முடியாது, என்கூட வா என காவேரியின் கையை பிடித்து இழுக்கிறார். இதனால் டென்ஷன் ஆன காவேரி, என்ன விடுங்க, நான் உசுரோட இருக்கணும்னு நினைச்சா இங்க இருந்து கிளம்பி போயிடுங்க என கோபமாக சொல்கிறார்.

34
காவேரியின் கர்ப்பத்தை கண்டுபிடித்ததா பாட்டி?

காவேரியின் இந்த செயலால் மனமுடைந்து போன விஜய், அங்கிருந்து கிளம்பி செல்கிறார். விஜய்யை திட்டியதும் ரூமுக்குள் சென்று கதைவை சாத்திக் கொள்ளும் காவேரி, கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். காவேரியின் பாட்டி அவரின் வயிறு பெருசா இருப்பதை நோட் பண்ணி, என்ன இவதான் மாசமா இருக்குற மாதிரி இருக்கு என கேட்க, காவேரி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் போல தெரிகிறது.

44
பசுபதியை வெளுத்துவிட்ட விஜய்

மறுபுறம் ஜெயிலில் இருந்த பசுபதி ஜாமீனில் வெளியே வந்ததும், நேராக விஜய்யின் வீட்டிற்கு சென்று, இதற்கு அப்புறம் விஜய்யும், காவேரியும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தால் நான் விஜய்யை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என கூறுகிறார். இதனால் டென்ஷன் ஆன விஜய், பசுபதியை இழுத்துப் போட்டு அடிக்கிறார். இனி விஜய்யும் காவேரியும் சேருவார்களா? பசுபதி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்கிற விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி மகாநதியின் அடுத்தடுத்த எபிசோடுகள் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories