2025-ம் ஆண்டு தொடங்கி அதற்குள் 7 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த ஏழு மாதங்களில் ரிலீஸ் ஆன படங்களில் தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த 17 தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தொடங்கி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குள் கடகடவென 7 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த 2025-ம் ஆண்டு கோலிவுட்டுக்கு பல வெற்றி தோல்விகளை கொடுத்துள்ளன. இந்த 7 மாதங்களில் மொத்தம் 152 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதில் வெறும் 17 திரைப்படங்கள் தான் வணீக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 135 படங்களும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன. இருப்பினும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 7 சதவீத வெற்றிப் படங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 11 சதவீதமாக அது உயர்ந்து இருக்கிறது.
24
லாபகரமான படங்கள் என்னென்ன?
இந்த பட்டியல், திரையரங்கில் லாபம் ஈட்டிய படங்கள் மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பு செலவை விட, ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை செய்து அதன் மூலம் நல்ல லாபம் பார்த்த படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை தனஞ்செயன் வெளியிட்டு இருக்கிறார். ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படங்களில் மதகஜராஜா மற்றும் மணிகண்டனின் குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. அதேபோல் பிப்ரவரி மாதத்தை பொருத்தவரை பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த ஃபயர் ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.
அதிலும் குறிப்பாக ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்து இயக்கிய ஃபயர் படம் வெறும் 75 லட்சம் பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டதாம். ஆனால் அப்படத்திற்கு 4.5 கோடிக்கு மேல் பிசினஸ் நடந்துள்ளதாம். இதனால் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது அப்படம்.
34
மர்மர் படமும் ஹிட் ஆனதா?
இந்த பட்டியலில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆன படங்களில் இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று மர்மர் மற்றொன்று பெருசு. இதில் மர்மர் படம் வெறும் 55 லட்சம் பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டதாம். ஆனால் அப்படம் அதைவிட 200 மடங்குக்கு மேல் லாபம் ஈட்டி கொடுத்திருக்கிறதாம். அதேபோல் பெருசு படத்தின் மொத்த செலவே 4 கோடி தானாம். ஆனால் அப்படத்தின் பிசினஸ் 9 கோடியாம். இதன்மூலம் தயாரிப்பாளருக்கு 5 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதேபோல் ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை ஒரே ஒரு படம் தான் லாபகரமானதாக அமைந்திருக்கிறது. அது வேறெதுவுமில்லை... அஜித்தின் குட் பேட் அக்லி.
மே மாதத்தை பொறுத்தவரை சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, சூரி நடித்த மாமன் ஆகிய திரைப்படங்கள் நல்ல லாபம் ஈட்டி கொடுத்திருக்கின்றன. ஜூன் மாதத்தில் தனுஷ் நடித்த குபேரா, அதர்வாவின் டிஎன்ஏ, விஜய் ஆண்டனி நடித்த மார்கன் ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. அதேபோல் ஜூலை மாதத்தை பொறுத்தவரை, சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, ராம் இயக்கிய பறந்து போ, விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி மற்றும் வடிவேலுவின் மாரீசன் ஆகிய படங்கள் இந்த ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்து உள்ளன. இதில் மாரீசன் படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே பெரும் தொகையை ஈட்டிவிட்டதாம்.