நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 21-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது.
சர்தார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சர்தார் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சர்தார் படத்தில் இடம்பெறும் ஏறுமயிலேறி என்கிற குத்து பாடலை வந்தியத்தேவன் கார்த்தி பாடியுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் பாடியபோது எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஜிவி. இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்னது....விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா? தீயாய் பரவும் தகவல் இதோ