பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் என கூறப்படும் இந்த படத்தில் சரத்குமாரின் மூன்றாவது பிள்ளையாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.