'இருட்டு அறையில் முரட்டு குத்'து படத்தில், எல்லை கடந்த கவர்ச்சியை காட்டி அடல்ட் பட நாயகி என பெயர் எடுத்த யாஷிகாவுக்கு, இப்படம் வெற்றி பெற்றாலும், சரியான வாய்ப்புக்கள் கிடைக்காததால் திடீர் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்தார்.
எனினும் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த யாஷிகா பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... இவரின் திரையுலக வாழ்க்கை சூடு பிடிக்க துவங்கியது.
ஆனால் எதிர்பாராத விதமாக, நண்பர்களுடன் பார்ட்டி செய்துவிட்டு வரும் வழியில்... மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். இது அவரின் திரையுலக வாழ்க்கையையே கேள்வி குறியாக மாற்றியது.
ஒருவழியாக அந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும்... யாஷிகா, அவ்வப்போது கண்களை கவரும் விதமாக விதவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அதே போல் மீண்டும் திரையுலகில் பிஸியாகியுள்ள யாஷிகா கைவசம் சுமார் 5 படங்கள் உள்ளன. இந்த படங்கள் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.