அந்த வகையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ பெடம்மா தல்லி கோயிலில் பூஜை செய்து சாகுந்தலம் படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கினர். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா, இப்படத்திற்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார். இதற்காக மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா.