சூர்யாவுக்கே இது தெரியாதாம்... சூர்யா 42 படத்தின் அப்டேட்டுகளை அள்ளிவீசிய தயாரிப்பாளர் - அதுக்குன்னு இவ்வளவா!

Published : Mar 21, 2023, 02:36 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சூர்யா 42 படத்தின் அப்டேட்டுகளை அப்படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார்.

PREV
14
சூர்யாவுக்கே இது தெரியாதாம்... சூர்யா 42 படத்தின் அப்டேட்டுகளை அள்ளிவீசிய தயாரிப்பாளர் - அதுக்குன்னு இவ்வளவா!

சிறுத்தை, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, அடுத்ததாக சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

24

பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூர்யா நடிக்கும் பீரியாடிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. நடிகர் சூர்யாவின் கெரியரில் இது பிரம்மாண்ட பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகளை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் டிக்கெட் விற்ற நிவேதா பெத்துராஜ் - எல்லாம் இதற்காக தானா... இது நல்ல ஐடியாவா இருக்கே!

34

பத்து தல படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அப்போது சூர்யா 42 படம் குறித்த அடுக்கடுக்கான அப்டேட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் சூர்யா இதற்கு முன் பண்ணிய படங்களை விட இப்படம் மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்தால் பயப்படுவார் என்பதால் அவரிடம் இதனை சொல்லவில்லை எனவும் ஞானவேல்ராஜா கூறினார்.

44

சூர்யா 42 படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது என்றால் அதற்கு ராஜமவுலி தான் காரணம் என தெரிவித்துள்ள அவர், இப்படத்தின் டீசர் ரெடியாக உள்ளதாகவும், வருகிற மே மாதம் டீசரை வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 3 வீடு மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை லாக்கர்! ஏமாந்த நேரத்தில் அபேஸ் செய்த கில்லாடி பெண்! சிக்கியது எப்படி?

Read more Photos on
click me!

Recommended Stories