தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். மதுரையை சேர்ந்த இவர் 11 வயதில் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்த இவருக்கு முதன்முதலில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்த நிவேதா, அடுத்தடுத்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தும் பெரியளவில் சோபிக்கவில்லை.