இது குறித்து வெளியான தகவலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 60 பவுன் தங்கம், வைரம், மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பாரம்பரிய நகைகள் கடந்த மாதம், 9-ஆம் தேதி... அவரின் லாக்களில் இருந்து திருடப்பட்டுள்ளது. இது பற்றி உடனடியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் மூன்று பேருக்கு மட்டுமே தன்னுடைய நகை லாக்கரின் சாவி எங்கு உள்ளது என்பது தெரியும் என்பதால் அந்த மூவர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறி தெரிவித்திருந்தார்.