எப்ப வேணாலும் ரூமுக்கு வருவோம்.. 15 நாள் அட்ஜஸ்மெண்ட் பண்ணனும்- டீல் பேசிய இயக்குனர்.. டார்டாராக கிழித்த நடிகை

First Published | Mar 21, 2023, 12:48 PM IST

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தன்னை அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைத்தவர்களை பிரபல சீரியல் நடிகை ஜீவிதா பேட்டி ஒன்றில் டார்டாராக கிழித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜீவிதா. ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்பட சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையுடன் வந்த இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் அட்ஜஸ்மெண்ட் செய்தால் ஹீரோயினாக நடிக்க வைத்து அதிக சம்பளமும் தருவதாக இயக்குனர் ஒருவர் கேட்டதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஷகீலா உடனான நேர்காணல் நிகழ்ச்சியின் போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசி உள்ளார் ஜீவிதா. அதில் அவர் கூறியதாவது : “சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் தருவதாக போனில் அழைத்தனர். பாலுமகேந்திராவின் அலுவலகம் பக்கத்தில் தான் தங்களது ஆபிஸ் இருப்பதாக கூறினர். அப்போது சினிமாவுக்கு நான் வந்த புதுசு என்பதால் யாருமே தெரியாது. சரி உடனே அங்கு ஆட்டோவில் சென்றேன்.

இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் எகிறும் கிளாமர்.. பிகினி உடையணிந்து கடலில் கவர்ச்சி ரைடு சென்ற ஹன்சிகா - ஹாட் கிளிக்ஸ் இதோ

Tap to resize

அப்போ அங்க நல்லா பேசுனாங்க. படத்துல நீங்க தான் இரண்டாவது ஹீரோயின். முதல் ஹீரோயின் நல்ல பிரபலமானவர்னு சொன்னாங்க. எங்களுக்கு ஓகே, இனி நீங்க தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்னு சொன்னாங்க. அட்ஜஸ்மெண்ட்னா என்னனு கேட்டபோது அந்த இயக்குனர், என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணனும்மா. கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடனும் அட்ஜஸ்ட் பண்ணனும்னு சொன்னாரு.

நாங்க எப்போ வேணாலும் ரூமுக்கு வந்துட்டு போவோம். தஞ்சாவூர் பக்கத்துல 15 நாள் இது நடக்கும். இதுக்கெல்லாம் ஓகேனா, நான் எதிர்பார்க்காத அளவுக்கு சம்பளம் தருவதாக கூறினர். அந்த சம்பளத்தோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தந்து உங்களை சினிமாவில் உயர்த்திவிடுவோம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் அப்படி கேட்டதும் கண்ணீர் தான் எனக்கு வந்தது. அவர்கள் முன் அழக்கூடாது என்று அங்கிருந்து சட்டென்று கிழம்பிவிட்டேன். இப்படி சினிமாவில் தன்னை அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைத்தவர்களை அந்த பேட்டியில் டார்டாராக கிழித்துள்ளார் ஜீவிதா.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் நயன்! லவ் டுடே நாயகனுக்கு ஜோடி லேடி சூப்பர்ஸ்டாரா?

Latest Videos

click me!