தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக வலம் வந்த செந்தில், கவுண்டமணி இருவருடனும் ஏராளமான நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து பிரபலமாகி இருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் நடிகை விசித்ராவும் ஒருவர். கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா, செந்தில் மற்றும் கவுண்டமணியுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். இதையடுத்து திருமணமாகி சினிமாவை விட்டு விலகிய விசித்ரா, பின்னர் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார்.
தற்போது நடிகை விசித்ரா, டாப் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி கலக்கி வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோக சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் விசித்ரா. தான் தாய் மற்றும் தந்தையை இழந்துவிட்டதால் அனாதை போன்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
தாய், தந்தை இருவருமே இறந்த பின்னர் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் இருக்கிறேன். என் தந்தை இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பைக்கில் சென்று கீழே விழுந்துவிட்டார். அப்போது அவரது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்த சில தினங்களில் அவர் இறந்துவிட்டதால், அந்த காயம் பற்றி என் அம்மா தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.