44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

First Published | Mar 21, 2023, 2:51 PM IST

தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகை லாவண்யா தன்னுடைய 44 வயதில் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

நடிகை லாவண்யா, நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து... 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை நிகழ்த்திய 'சூரிய வம்சம்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதை தொடர்ந்து, விஜய் நடித்த பத்ரி, கமல் ஹாசன் நடித்த தெனாலி, ரஜினிகாந்த் நடித்த படையப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

3 வீடு மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை லாக்கர்! ஏமாந்த நேரத்தில் அபேஸ் செய்த கில்லாடி பெண்! சிக்கியது எப்படி?

Tap to resize

பல திரைப்படங்களிலும் நடித்தும், அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக நடித்து வரும் அருவி சீரியலில் லட்சுமி என்கிற வேடத்தில் நடித்து வருகிறார்.

40 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவருக்கும், பிரசன்னா என்கிற தொழிலதிபருக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது.

இரண்டு பிரபலத்துடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..? கூட்டி வைத்து கண்டித்தாரா சூப்பர் ஸ்டார்!

இவரின் திருமணத்தில், அருவி சீரியல் குழுவினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும் இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் மனதார தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!