மீண்டும் தமிழ் படங்களில் பிஸியான நடிகை விருமாண்டி அன்னலட்சுமி! படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!

First Published | Mar 21, 2023, 10:19 PM IST

“பாபா பிளாக்‌ ஷீப்” படப்பிடிப்பில் அனைவரையும் அழ வைக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார் விருமாண்டி பட நடிகை அபிராமி. 
 

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” .  இப்படத்தின் மூலம்  நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி. 

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள்,  துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், நடிகை அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது. 

நாட்டு நாட்டு பாடலுக்கு.. ஆயிரக்கணக்கான கார்கள் ஆடிய லைட் டான்ஸ்! மெர்சல் செய்த டெஸ்லா நிறுவனம்!

Tap to resize

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது… “பாபா பிளாக்‌ ஷீப்” பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிரமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம்  இருந்தது.  இப்பாத்திரத்திற்காக  நடிகை அபிராமி அவர்களை அணுகினேன்,  கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். 

மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள்.  இப்படம் நடிகை அபிராமிக்கு  மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள்.  படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார். 

44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இந்த படத்தில்  அயாஸ் நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெரீப், மதுரை முத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.  

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் மாறா, சுல்தான், மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்த அபிராமி, பாபா பிளாக் ஷீப், மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் 'ஆர் யூ ஓகே பேபி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 வீடு மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை லாக்கர்! ஏமாந்த நேரத்தில் அபேஸ் செய்த கில்லாடி பெண்! சிக்கியது எப்படி?
 

Latest Videos

click me!