தென்னிந்திய திரையுலகில், தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார், 15.4 மில்லியன் ஃபாலோவர்சை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், ஓய்வு நாட்களில், நாய் குட்டியுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள், நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் புகைப்படங்கள் மற்றும் கண்ணை கவரும் விதத்தில், எடுத்து கொள்ளும் போட்டோ ஷூட் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
அதே போல், ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால்... 3 முதல் 4 கோடி வரை கறாராக சம்பளத்தை பேசி நடிக்கிறாராம். அந்த வகையில் இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்த நிலையில், இதை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்து வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து அம்மணிக்கு படங்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் படத்தில் பிசியாக இவர் நடித்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் சில காதல் சர்ச்சையில் அவ்வப்போது சிக்கி வருகிறார். அந்த வகையில் கீர்த்தி, துபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்தபடி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.
பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்
இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என்றும், இவரை தான் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பரப்பிவிட்டனர். இதனால் மீண்டும் கீர்த்தி சுரேஷின் திருமண பேச்சுகள் எழத்தொடங்கின. ஹாஹாஹா... இந்த நேரத்தில் என் நண்பனை இதில் இழுக்க வேண்டாம். நேரம் வரும்போது நானே அந்த மர்ம மனிதனை காட்டுகிறேன் என முற்றுப்புள்ளி வைத்தார்.