தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதேபோல் திருமணமான கையோடு, ரவீந்தர் - மகாலட்சுமிக்கு 200 சவரனுக்கு மேல் நகை, பெரிய பங்களா, தங்கத்தாலான கட்டில், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் போன்றவற்றை பரிசாக கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் தங்களுடைய திருமணம் குறித்து வெளியான விமர்சனங்களுக்கும் இருவரும் சேர்ந்து பல்வேறு பேட்டிகள் கொடுத்து பதிலடி கொடுத்து வந்தனர்.
அதைப்போல் அவ்வபோது தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்த இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ரவீந்தர் - சிங்கிளாக எடுத்த போட்டோஸை வெளியிட்டு, மிகவும் சோகமான கேப்டனை கொடுத்திருந்தார். அந்த பதிவில் "நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என பதிவிட்டிருந்தார்.
அது உண்மை கதையே இல்ல... தி கேரளா ஸ்டோரி படத்தை பொளந்துகட்டிய கமல்ஹாசன்
ரவீந்திரன் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மகாலட்சுமியுடன் சண்டையா என கேள்வி எழுப்பியதோடு தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் ரவீந்தர் சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடவே, இருவருக்கும் விவாகரத்து நடைபெற போகிறது என்று வதந்தியை பரப்ப துவங்கி விட்டறார்கள்.
இதை பார்த்த மகாலட்சுமி, தற்போது இந்த வதந்திக்கு மிகவும் கூலாக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் போட்டுள்ள பதிவு, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு. "டே புருஷா எத்தனை முறை உன்னிடம் தனியாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிடாதே என சொல்லி இருக்கிறேன். இப்ப பாரு மீண்டும் சோசியல் மீடியாவில் நாம் இருவரும் பிரிஞ்சிட்டோம் என செய்தி வெளியிடுகிறார்கள். மவனே இதுக்கு அப்புறம் , இந்த தப்பை திரும்ப செஞ்சா நீ என்னுடைய ஃபேவரட், சேமியா உப்புமாவை மூன்று வேலையும் சாப்பிட வேண்டி வரும் என செல்லமாக கண்டித்துள்ளார்.
நான் அதே பின்னணியில் இருந்து வந்தவள்.! 'கழுவேத்தி மூர்க்கன்' பட அனுபவம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன்!
இப்படி வதந்தியை பரப்பும் சில யூடியூப்களுக்கு, தன்னுடைய மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் அதில் தெரிவித்துள்ள மகாலட்சுமி, " இன்னுமாடா நாங்க ட்ரெண்ட்... இதுக்கு இல்லையா ஒரு எண்டு" என மிகவும் கூலாக கேப்ஷன் போட்டுள்ளார். அதேபோல் நாங்கள் எப்போதுமே மிகவும் சந்தோஷமான தம்பதிகள் என்பதையும் தெரிவித்துள்ளார் மகாலட்சுமி. இந்த பதிவு மற்றும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும், படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.