ஒரு வாரத்தில் திருமணம்... பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

First Published | May 28, 2023, 2:04 PM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சர்வானந்த், நேற்று இரவு கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சர்வானந்த் விபத்தில் சிக்கினார். இந்த செய்தி டோலிவுட் பிரபலங்கள் மற்றும் சர்வானந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சர்வானந்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை நடிகர் சர்வானந்த் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் சந்திப்பில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. 

கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சர்வானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சர்வானந்துக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் குறித்து சர்வானந்தின் குடும்பத்தினர் இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயன்றதால் சர்வானந்தின் கார் டிவைடரில் மோதியதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிச்சைக்காரர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்து ‘பிச்சைக்காரன் 2’ வெற்றியை கொண்டாடிய விஜய் ஆண்டனி

Tap to resize

அவர் பயணித்தது விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் என்பதால், பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதனால் தான் அவர் பெரியளவில் காயங்கள் இன்றி தப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்து குறித்து காவல்துறையோ, குடும்பத்தினரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எது எப்படியோ சர்வானந்த் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வானந்திற்கு ரக்‌ஷிதா ரெட்டி என்பவருடன் வருகிற ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்தின் திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சர்வானந்திற்கும், ரக்‌ஷிதா ரெட்டிக்கும் கடந்த ஜனவரி மாதமே ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது அனைவரும் தெரிந்ததே. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் சர்வானந்த் விபத்தில் சிக்கியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... மகனுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்த அருண்விஜய்... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

Latest Videos

click me!