மகனுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்த அருண்விஜய்... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

First Published | May 28, 2023, 12:18 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய், தனது மகனுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண்விஜய். சினிமாவில் பல ஆண்டு கடினமாக உழைத்த அருண் விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாக தான் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தடையறத் தாக்க, தடம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் அருண் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாகவும் நடித்து மிரட்டி இருந்தார் அருண் விஜய்.

அவர் நடிப்பில் கடைசியாக ரிலீசான யானை திரைப்படம் நல்ல வசூலை வாரிக்குவித்து, அருண் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. யானை படத்தின் வெற்றிக்கு பின்னர் அருண் விஜய் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. இவர் நடித்த பார்டர், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதையும் படியுங்கள்... அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் கமல்ஹாசன் - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்


இதுதவிர ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள மிஷன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்தில் நாயகனாக நடித்து வந்த சூர்யா, அப்படத்தில் இருந்து விலகியதால், அந்த வாய்ப்பு தற்போது அருண் விஜய்க்கு சென்றுள்ளது. வணங்கான் படத்தின் மூலம் அருண் விஜய்யும், பாலாவும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய், தன் மகனுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை கடற்கரையில் உள்ள கழிவுகளை அகற்றினோம். அடுத்த தலைமுறையான எனது மகனுக்கும் அதனை கற்றுக்கொடுத்தேன். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க நம்மால் முடிந்த பங்களிப்பை கொடுப்போம். ஹாப்பி சண்டே” என பதிவிட்டுள்ளார். இதோடு கடற்கரையை சுத்தம் செய்தபோது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை ரியல் ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அற்புதமான புதிய வீடு... புது நாடாளுமன்ற கட்டிடம் குறித்து சிலாகித்து பேசிய ஷாருக்கான் - ரிப்ளை செய்த மோடி

Latest Videos

click me!