கடந்த மார்ச் மாதம், சீரியல் பிரபலமான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஈரோட்டில் விஷ்ணு காந்த் குடும்ப முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், பெரிதாக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
பிரிந்த சில நாட்களிலேயே விஷ்ணுகாந்த், சம்யுக்தா பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை youtube சேனல் ஒன்றில் கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா வெளியிட்ட வீடியோவும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி தங்களுடைய பிரிவு குறித்தும், சாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், சமீபத்தில் விஷ்ணுகாந்த், சம்யுக்தா தன்னை காதலிக்கும் போதே மற்றொரு நபரிடமும் தொடர்பில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சம்யுக்தா பற்றி பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்..
அந்த ஆடியோவில், ஆர்ஜே. ரவியை தான் காதலிக்கிறேன் என்று சொல்வதும், பின்னர் அவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று சக நண்பர்களிடம்கூறுகிறார். அவரையும் காதலிப்பதாக கூறி கொண்டு, அப்படியே விஷ்ணு காந்தையும் காதலித்து வந்துள்ளார். அதற்கு சம்யுக்தாவின் நண்பர்கள் விளக்கம் கேட்டபோது, என்னிடம் தவறாக நடந்து கொண்டது ரவி பற்றி ரவிவாயில் இருந்து ஒத்துக் கொள்ள வைப்பதற்காக தான் பேசினேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். தற்போது இந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதை தொடர்ந்து வி.ஜே .ரவி... சம்யுக்தா தவறாக நடந்து கொண்டதாக கூறியதற்கு நான் அப்படி பட்ட குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இவருடன் 'காதலே காதலே' வெப் சீரிஸில் இணைந்து நடித்து வரும் சக நடிகையான வெண்பா, ரவியின் இஸ்டாக்ராம் போஸ்ட்டை ஷேர் #westandwithravi என்கிற ஹேஷ்டேக் போட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவும்... விஷ்ணுகாந்த் ஷேர் செய்துள்ள ஆடியோவும் வைரலாகி வருகிறது.