தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ரசிகர்களால் அன்புடன் நவரச நாயகன் என அழைக்கப்படும் இவர், இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டை பெற்றவர்.