அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!
First Published | Jul 12, 2022, 2:36 PM ISTகொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மூடி கிடந்த திரையரங்குகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் காத்திருப்பில் இருந்த படங்கள் குறித்த அப்டேட்டுக்கள் அடுத்து வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து முன்னணி நாயகர்களின் படங்கள் அஜித், விஜய், கார்த்தி, கமல், சூர்யா தனுஷ் என டாப் நாயகர்களின் படங்கள் வரிசையாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வருடம் வரிசை கட்டியது என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம். வலிமை, வாரிசு, வெந்து தணிந்தது காடு, வாடிவாசல், விக்ரம் தற்போது வணங்கான் என V வரிசை படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.