கானா பாடகியான இசைவாணி, பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்ட்டில் இணைந்து பல்வேறு சுயாதீன் பாடல்களை பாடியதன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
24
இவர் கடந்த 2019-ம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஓராண்டிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுகூட இவர் விவாகரத்து குறித்து எந்தவித தகவலையோ, விவாகரத்திற்கான காரணத்தையோ அவர் வெளியிடவில்லை.
தற்போது அவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் கானா பாடகி இசைவாணி, தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார். பல்வேறு கனவுகளுடன் எனது திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
44
நான் கானா பாடல் பாட எனது வீட்டில் இருந்த ஆதரவு, எனது கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. கானா தான் எனக்கு உயிர், அதற்கு கணவர் வீட்டில் அனுமதி கொடுக்காததால், அவரை விட்டு பிரிந்துவிட்டேன். இப்போ அவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் பண்ணிக்கிட்டார். எனக்கும், அவரது குடும்பத்துக்கும் தற்போது எந்தவிதமான தொடர்பும் இல்லை” என கூறியுள்ளார் இசைவாணி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.