இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை பல வருட போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... கையில் சிகரெட் உடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா
பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். இதில் அவர் வந்தியத்தேவன் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கமிட் ஆகிவிட்டால் இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது, அதிக நாள் கால்ஷீட் தர வேண்டும் என மணிரத்னம் கூறியதால், இது நமக்கு செட் ஆகாது என விஜய் விலகி விட்டாராம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.