சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவரது குழந்தைத்தனமும் அறியாமையும், இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளில் ஒருவராக மாற்றியது.
அதே போல் குக் வித் கோமாளி போட்டியாளர்களிடம் எந்த கோமாளி வர வேண்டும் என கேட்டால் தயங்காமல் ஷிவாங்கியின் பெயரை சொல்வார்கள். அந்த அளவிற்கு அவரை பிடிக்கும்.
அதே போல்... அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அதனை வெள்ளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது ஷிவாங்கி, கோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் சென்றுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான 'ஷாம்ஷெற' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஷிவாங்கி தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது ரன்பீர் கபூருடன், இவர் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில வற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னுடைய முதல் மும்பை பயணம் என கூறி வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.