நடிகர் விக்ரம் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
திடீர் உடல்நல குறைவு காரணமாக, 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத விக்ரம், இன்று நடைபெற உள்ள 'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என கேள்வி எழுந்தது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் ,கனிஹா, மிர்னாலினி ரவி , மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியும் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கோப்ரா' ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். லலித் குமார் மற்றும் உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.