OTT Must Watch Web Series : வெற்றிமாறன் ஒரு வெப் சீரிஸ் இயக்கி இருக்காரா என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வெப் சீரிஸ்-ஐ ஓடிடியில் பார்த்தால் நிச்சயம் ஷாக் ஆகுவீர்கள்.
உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஓடிடி தளங்களில் வெளியாகும் உண்மைக் குற்றப் பின்னணியிலான கதைகள் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு ஆந்தாலஜி தொடர்தான் ‘பாவக் கதைகள்’.
இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள ஓர் இரவு என்கிற குறும்படம், தந்தை–மகள் உறவின் மறுபக்கத்தை மிகவும் அதிர்ச்சிகரமான வகையில் பதிவு செய்துள்ளது. இதில் சாய் பல்லவி, சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார்.
சுமதி தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வசித்து வருகிறார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் அவர், கர்ப்பமாகவும் இருக்கிறார். இந்த நிலையில், மகளைப் பார்க்க வரும் அவரது தந்தை, சில நாட்கள் வீட்டில் தங்கியிருந்து சீமந்தம் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். இதனை நம்பும் சுமதி, அவருடன் சொந்த வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் அடுத்த நாள் நடைபெறும் சீமந்த நிகழ்வுக்கு பின்னர் சுமதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. குடும்ப கௌரவம் என்ற பெயரில் தந்தை எடுக்கும் கொடூரமான முடிவு கதையின் போக்கையே மாற்றுகிறது.
34
விஷம் கலந்த பால்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, தனது மகளுக்கு கொடுக்கப்படும் பாலில் விஷத்தை கலக்கிறார் தந்தை. இதனை அறியாமல் அதை அருந்தும் சுமதி, பரிதாபமாக உயிரிழக்கிறார். மகளின் வாழ்க்கையைவிட குடும்ப கௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொடூர தந்தையின் மனநிலையை இந்தக் கதை மிகவும் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக சாய் பல்லவி மற்றும் பிரகாஷ் ராஜ் இடையேயான காட்சிகள் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. கதையின் கிளைமாக்ஸில் வரும் காட்சிகள், தந்தை–மகள் உறவின் சோகமான பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன.
‘பாவக் கதைகள்’ என்பது நான்கு தனித்தனி கதைகளை கொண்ட ஆந்தாலஜி வெப்சீரிஸ். சாதி, மதம், கௌரவம், ஆணாதிக்கம், கௌரவக் கொலை மற்றும் குடும்ப உறவுகளில் உருவாகும் சிக்கல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பின்னணியை கொண்டிருந்தாலும், சமூகத்தின் பெயரால் தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை மையப்படுத்துகின்றன. அவற்றில் சாய் பல்லவி மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள ஓர் இரவு, அதன் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் கவனம் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.