Mandaadi : வசூலில் செஞ்சுரி அடித்த மண்டாடி... பாக்ஸ் ஆபிஸில் விஜய், சூர்யாவுக்கு அடுத்து சூரி தான்...!

Published : Sep 21, 2026, 02:59 PM IST

Mandaadi Movie Box Office Record : மதிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆன மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது.

PREV
14
Mandaadi Movie Box Office Record

இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், மீனவ மக்களின் வாழ்வியலையும், அவர்களுக்கு இடையே நடைபெறும் பரபரப்பான படகுப் போட்டியையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடல் சார்ந்த விளையாட்டு, வேகமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு, பின்னணி இசை என பல்வேறு அம்சங்கள் இணைந்து ‘மண்டாடி’ திரைப்படத்தை திரையரங்க அனுபவத்திற்கு ஏற்ற படமாக மாற்றியுள்ளது. அதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை

24
சூரிக்கு புதிய அடையாளம்!

‘மண்டாடி’ திரைப்படம் சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. குறிப்பாக, வசூல் ரீதியாகவும் இப்படம் தொடர்ந்து சாதனை படைத்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரியை இனி ‘மண்டாடி சூரி’ என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவுக்கு இப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. கடந்த 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’, தற்போது 12-வது நாளை எட்டியுள்ளது.

34
100 கோடி கிளப்பில் இணைந்த மண்டாடி

இரண்டாவது வார இறுதியில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.88.32 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு சந்தையிலும் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளிநாடுகளில் சுமார் ரூ.75 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வசூல் ரூ.15.40 கோடியை எட்டியுள்ளது.

இந்திய மற்றும் வெளிநாட்டு வசூலை சேர்த்து பார்க்கும்போது, ‘மண்டாடி’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.103.72 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘மண்டாடி’ பெற்றுள்ளது. இதனால் 100 கோடி வசூல் செய்த தமிழ் நடிகர்களின் பட்டியலிலும் சூரி இணைந்துள்ளார். இப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

44
100 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன?

இதனிடையே ‘மண்டாடி’ படத்துடன் வெளியான கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என கூறப்படுகிறது. இதுவரை இப்படம் உலகளவில் ரூ.23.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், 100 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை கடந்துள்ள ‘மண்டாடி’, இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விஜய்யின்‘ஜனநாயகன்’, சூர்யா நடித்த ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ உள்ளிட்ட படங்களுடன் தற்போது ‘மண்டாடி’ திரைப்படமும் டாப் 5 பட்டியலில் இணைந்துள்ளது. சூரியின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை மண்டாடி படைத்துள்ளது.

Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories