எடக்கு மொடக்காக கேள்வி கேட்டு... துஷாரா விஜயனை நேரடியாக வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்! பதிலடி கொடுத்த நாயகி!

Published : Sep 01, 2022, 03:36 PM IST

'சார்பட்டா' படத்திற்கு பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள துஷாரா விஜயனிடம், பயில்வான் ரங்கநாதன் நேரடியாக சில கேள்விகளை எழுப்பி அவரை வம்பு இழுக்க இதற்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார் துஷாரா.  

PREV
17
எடக்கு மொடக்காக கேள்வி கேட்டு... துஷாரா விஜயனை நேரடியாக வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்! பதிலடி கொடுத்த நாயகி!

நடிகை துஷாரா விஜயன் நடிப்பு, 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்ததை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து நேற்று வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் தொடர்ந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.

27

இந்தப் படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் மத்தியில் சில நெகட்டிவ் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் துஷாரா விஜயன் கூடுதல் பொறுப்புடன் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

37

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில் இந்த படத்தின் நாயகி துஷாரா விஜயன் கலந்து கொண்டார். படம் பார்த்து முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துஷாரா விஜயன் மிகவும் சுவாரசியமாக பதிலளித்தார்.

மேலும் செய்திகள்: இலக்கு தமிழ்நாடு தான்..! ஏர்போட்டில் இருந்து இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ வைரல்!
 

47

இந்த நிகழ்ச்சிகள் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு நேரடியாகவே சில எடக்கு மொடக்கான கேள்விகளை நடிகை துஷாரா விஜயனிடம் கேட்க அதற்க்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

57

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தன் பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதே... இதன் மூலம் புது கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறீர்களா? என்று பயில்வான் கேட்க...  இதை தான் கலாசார சீரழிவாக பார்க்கவில்லை என பதில் கொடுத்தார். 

மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து குக் வித் கோமாளி புகழ்..! வைரலாகும் திருமண போட்டோஸ்..!
 

67

அர்ஜுன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே? என்று பயில்வான் கேட்க... இதற்க்கு பதிலளித்த துஷாரா விஜயன், எங்கள் கருத்தை இந்த படத்தின் மூலம் நாங்கள் முன் வைக்கிறோம், யாரும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என பதிலடி கொடுத்தார்.
 

77

தொடர்ந்து வம்பிகுழுக்கும் வகையில் பேசிய பயில்வான் வாயை அடைப்பது போல்... தான் நடித்த இரண்டு படத்தையும் ஒன்றாகத்தான் நினைக்கிறேன். வேறுபடுத்தி பார்க்கவில்லை. எனக்கு இரண்டு படங்களும் நல்ல நினைவுகள் தான் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: தளபதி விஜயுடன் விமானத்தில் விதவிதமாக செல்ஃபி... வரலட்சுமி சரத்குமார் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்..!
 

 

Read more Photos on
click me!

Recommended Stories