விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின் நான் தாங்க... அடித்து கூறிய நடிகை! புன்னகையோடு Yes சொன்ன தளபதி!

Published : Aug 13, 2024, 06:15 PM IST

தளபதி விஜய்க்கு, இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், தளபதிக்கு பிடித்த நடிகை நான் தான் என பிரபல நடிகை ஒருவர் கூற, அதற்கு விஜய்யும் Yes என புன்னகையோடு கூறியுள்ளார்.  

PREV
16
விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின் நான் தாங்க... அடித்து கூறிய நடிகை! புன்னகையோடு Yes சொன்ன தளபதி!
Thalapathy Vijay First Movie Appearance:

தளபதி விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால், தன்னுடைய மகனை சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். பின்னர் 1992 ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், அடுத்தடுத்து வெளியான படங்கள் இளவட்ட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. 
 

26
Vijay First Family Audience Movie:

பின்னர் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் ஜெனரஞ்சகமான கதாநாயகனாக உருவெடுத்த விஜய், தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏறு முகத்தை சந்தித்தார். அதன்படி இவர் நடித்த லவ் டுடே, பிரியமுடன், பிரியமானவளே, நிலாவே வா, பகவதி, கில்லி, போக்கிரி, சிவகாசி, போன்ற படங்கள் எப்போதும் ரசிகர்களால் அதிகம் பார்க்கக் கூடிய, எவர்கிரீன் படங்களாக உள்ளன.

அடுத்த ஹீரோயின் ரெடி! தாய்ப்புலியுடன் குத்தாட்டம் போட்ட குட்டிப்புலி.. வைரலாகும் நடிகை கஸ்தூரி மகள் வீடியோ!
 

36
Goat Movie

தற்போது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'கோட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தில், தளபதி விஜய் 'பிகில்' படத்திற்கு பின்னர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
 

46
Goat Movie Details

மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்திரி நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் லைலா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதே போல் இன்னும் ஓரின நாட்களில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீதேவி முதல்... பானுபிரியா வரை! 14 வயசுலயே ஹீரோயினாக மாறிய 6 நடிகைகள்!

56
Actress Asin

யுவன் சங்கர் ராஜா, தளபதி விஜய்யின் படத்திற்கு பல வருடங்களுக்கு பின்னர் இசையமைத்துள்ளார் என்பதால், இப்படத்தின் இசை அதிக அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்பது பற்றிய தகவல் தான், தற்போது  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனக்கென லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட தளபதிக்கு, பிரபல நடிகை அசினை தான் மிகவும் பிடிக்குமாம். இது குறித்து நடிகை அசின் போக்கிரி படத்தின் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் பேசி இருப்பார். அதாவது விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகை யார் என அவரிடம் தொகுப்பாளர் கேட்க, அதற்கு பதில் அளிக்கும் ஆசியும் கண்டிப்பாக நான் தான். வேண்டுமானால் அவரிடமே கேட்டுப்பாருங்கள் என கூறுவார். தளபதி விஜய்யும் இந்தக் கேள்விக்கு சிரித்தபடியே நடிகை அசின் தான் தனக்கு பிடித்த நடிகை என பதில் அளித்துள்ளார்.
 

66
Vijay Favorite Heroine is Asin

இதன் மூலம் விஜய்க்கு பிடித்த நடிகை அசின் தான் என்பது தெரிய வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  விஜய் - அசின் இணைந்து போக்கிரி, சிவகாசி, காவலன், என மூன்று படங்களில் நடித்துள்ளனர். இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெற்ற திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்காக திருமணத்தையே நிறுத்திய அம்மா? நடிகருடன் Living Relation-ல் அசிங்கப்பட்ட த்ரிஷா! பிரபலம் ஷாக் தகவல்
 

Read more Photos on
click me!

Recommended Stories