கையில் குழந்தை.. கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுக்கும் அமலா பால்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

நடிகை அமலா பால் தனது கணவர் ஜெகத் தேசாயுடன் தங்கள் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Amala Paul

தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபர் அமலா பால். 2009-ம் ஆண்டு நீலத்தாமரா என்ற படத்தின் மூலம் மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2010-ம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அமலா பால் மைனா படத்தின் மூலம் பிரபலமானார்.

Amala Paul

இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்த நிலையில், தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் அமலா பால். விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.


Amala Paul

தெய்வ திருமகள் படத்தில் பணியாற்றிய போது இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2016-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

Amala Paul

மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் அவர் நடித்து வந்தார். பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தில் அமலா பால் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Amala Paul

ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக கூறிய அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதையும் அமலா பால் அறிவித்தார். அமலாபால் கர்ப்பிணியாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். 

Amala Paul

அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் தாங்கள் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி அமலா பாலும், ஜெகத் தேசாயும் கேக் வெட்டி கொண்டாடினார்.

Amala Paul Husband Jagat Desai

அமலா பால் கையில் குழந்தை உடன் ஒரு போட்டோவில் இருக்கிறார். மேலும் தனது கணவருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. 

Latest Videos

click me!