Mysskin
விடுதலை, கருடன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கூழாங்கல் என்கிற படத்தை இயக்கி, அப்படத்திற்காக ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறார். கொட்டுக்காளி திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கினும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் முகம் சுளிக்கும் வகையில் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Director Mysskin
அவர் பேசியதாவது : “ரொம்ப நாளைக்கு முன் சிவகார்த்திகேயனின் பட பூஜையில் நான் கலந்துகொண்டேன். அப்போது சாப்பிடும் போது வெள்ளை சட்டை போட்டு ஒரு பையன் கிராமத்தில் இருந்து வந்தவன் மாதிரி உட்கார்ந்து இருந்தான். யார்ரா தம்பி நீனு கேட்டேன். சார் நான் தான் வினோத், கூழாங்கல்னு படம் எடுத்திருக்கேன்னு சொன்னான். அடுத்து எடுக்கப்போற படத்தை மெதுவா எடுப்பானு சொல்ல வாயை திறப்பதற்குள், நான் ஆரம்பிச்சிட்டேன் சார்னு சொன்னான்.
யார்ரா மியூசிக்னு கேட்டேன். யாருமே இல்ல சார்னு சொன்னான். எனக்கு பயங்கரமா கோபம் வந்திடுச்சு. பெரிய மயி* மாதிரி பேசுறான்னு தோணுச்சு, நானும் வீட்டுக்கு வந்துட்டேன். பின்னர் என்னுடைய உதவி இயக்குனர்களை அழைத்து, இந்த மாதிரி ஒருத்தன பார்த்தேன், பொறுக்கிப்பய, கருப்பா ஒருமாதிரி இருந்தான்... யாரு மியூசிக் டைரக்டர்னு கேக்குறேன், பெரிய மயி* மாதிரி எங்கிட்ட வந்து யாருமே இல்லேனு சொல்றான், நீங்க அப்படிலாம் படம் எடுத்துறாதீங்கனு சொன்னேன்.
இதையும் படியுங்கள்... நான் அந்த மாதிரி ஆள் இல்ல... தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்? - கொட்டுக்காளி விழாவில் வெடித்த சர்ச்சை
Mysskin speech in Kottukkaali Trailer Launch
நான் ஏதோ நல்லது சொல்ற மாதிரி அதை சொன்னேன். ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்க்கும் போது தான் தெரிந்தது, என்னைய வினோத் செருப்ப கழட்டி அடிச்சிருக்கான். இந்தப்படத்தை மக்கள் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நான் அவுத்துபோட்டு கூட நிற்க தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை பாருங்கனு சொல்லி, நிர்வாணமா ஒரு டான்ஸ் ஆடலாம்னு இருக்கேன்னு மிஷ்கின் சொன்னதும் அங்கிருந்தவர்கள் முகம் சுளித்தனர்.
இதைவிட கொச்சையாக தொடர்ந்து பேசிய மிஷ்கின், சூரி இந்த படத்துல ஒரு சீன்ல மூத்திரம் அடிச்சிருக்கான். நடிக்கவே இல்ல வாழ்ந்திருக்கான்.
Mysskin Speech
அதுக்கு வினோத் அந்த கேமராவை அப்படியே பக்கத்துல எடுத்துட்டு போயிருக்கான். கேமராவை கீழ எதுவும் திருப்பி காட்டிறப்போறானோனு நான் பயந்துட்டே இருந்தேன். திருப்பி பார்க்கலாம்னு ஒரு பக்கம் ஆசையும் வருது என மிஷ்கின் பேசியது அனைவரையும் ஷாக் ஆக்கியது.
பின்னர் தன் தந்தை மறைவு குறித்து பேசிய மிஷ்கின், என் தந்தை கடந்த மாதம் இறந்துபோனார். அவரை குளிப்பாட்டும் போது அவரது கையை பார்த்தேன் சுருங்கி இருந்தது. என்னை முத்தம் கொடுத்த, என்னைப்பார்த்து புன்னகைத்த அந்த மனிதனை புதைக்கும் போது அவர் வாய்க்குள் மண்ணை அள்ளி போட்டனர். உலகில் நான் பார்த்த மிக முக்கியமான ஷாட்டாக அதை பார்க்கிறேன். இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை என மிஷ்கின் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி முதல்... பானுபிரியா வரை! 14 வயசுலயே ஹீரோயினாக மாறிய 6 நடிகைகள்!