80's Heroines
80-களில் மிக குறைந்த வயதிலேயே... அதாவது பாவாடை சட்டை போடும் வயதிலேயே, பாவாடை தாவணி அணிந்து நடிக்க தயாரான சில நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த காலத்தில் 18 வயதுக்கு முன்னர் ஹீரோயினாக நடிக்க துவங்கினால்.. அது மிகப்பெரிய விவாதங்களுக்கு ஆளாகிறது. ஆனால் 80-களில் ஹீரோயினாக நடித்த பலர், 15 வயதை கூட எட்டாத நடிகைகள் தான். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Urvashi
நடிப்பு ராட்சசி என பெயர் எடுத்த, நடிகை ஊர்வசி ஒன்பதாவது படிக்கும் போதே... அதாவது தன்னுடைய 14 வயதிலேயே 'முந்தானை முடிச்சு' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் நடித்த பின்னர் பள்ளிக்கு போய் பரிட்சை எழுதினார் என கூறப்படுகிறது. நடிப்பு காரணமாக தன்னுடைய சிறு வயதிலேயே படிப்பில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டதால், தன்னுடைய மகள் - மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு எப்போதுமே உண்டாம். அதன்படி தன்னுடைய மகளை ஒரு சாஃப்ட் வேர் இன்ஜினீயராகவும் மாற்றியுள்ளார். மகள் பள்ளியில் படித்து வருகிறார்.
பணத்துக்காக திருமணத்தையே நிறுத்திய அம்மா? நடிகருடன் Living Relation-ல் அசிங்கப்பட்ட த்ரிஷா! பிரபலம் ஷாக் தகவல்
Shobana
பத்மினியை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இருந்து, நடிக்க வந்த நடிகை ஷோபா, மலையாக இயக்குனர் பாலச்சந்திரனின் 'ஏப்ரல் 18' என்ற படத்தில் நடிக்கும் போது, இவருக்கு 14 வயது கூட முழுமையடைய வில்லையாம். பதின்மூன்றரை வயதுதான் ஆனதாம். தமிழில் ஷோபனா முந்தானை முடிச்சு படத்திற்கும் வாய்ப்பு தேடி சென்றபோது, படப்பிடிப்பு நேரத்தில் தேர்வு இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை உருவானதாக கூறப்படுகிறது.
அதே போல் நடிகை பானுப்ரியா 1983ம் வருடம், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்திற்கு முன் பானுப்ரியா 'தூறல் நின்னு போச்சு' படத்தில் நடிக்க வாய்ப்புக்காக சென்றபோது அந்த படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது, 1981 வருடம் இப்படம் வெளியான நிலையில் 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஹீரோயின் வாய்ப்பு தேடி சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Anju
அதே போல் பிரபல நடிகை அஞ்சுவும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் ஹீரோயினாக மாறியவர். இவர் தமிழில் முந்தானை சபதம் திரைப்படத்தில் நடிக்கும் போது, இவருக்கு 13 வயதே நிரம்பி இருந்ததாம்.