Published : Aug 13, 2024, 02:22 PM ISTUpdated : Aug 21, 2024, 10:31 AM IST
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பல நடிகர், நடிகைகள் பின்னாளில் மோசமான நிலையை அடைந்தனர். கே.பி. சுந்தராம்பாள் கணவர் இறந்த பின்னர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். நிஷாநூர் தனது சொத்துக்களை இழந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தெருவில் உயிரிழந்தார்.
சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் பின்னாளில் இருந்த இடம் தெரியாமலே காணாமல் போயுள்ளனர். இன்னும் சில பிரபலங்களோ நினைத்துக் கூட பார்க்க முடியாத மோசமான நிலையை அனுபவித்துள்ளனர். அப்படி பிரபலங்களுக்கு நடந்த மோசமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கே.பி. சுந்தராம்பாள் :
26
KP Sundarambal
பிரபல பாடகர் கிட்டப்பாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் கே.பி சுந்தராம்பாள். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த தம்பதிக்கு குழந்தையும் இல்லை. சுந்தராம்பாளை பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்த கிட்டப்பா 1933-ம் ஆண்டு மித மிஞ்சிய குடிப்பழக்கத்தால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 26 தான். சுந்தராம்பாளுக்கு 24 வயது. கணவர் இறந்த பின் அறுசுவை உணவுகளை தவிர்த்து பத்திய உணவுகளை மட்டுமே கே.பி சுந்தராம்பாள் சாப்பிட்டு வந்தார். மேலும் ஆடை ஆபரணங்கள் என அலங்காரங்களை தவிர்த்து எளிய உடைகளை மட்டுமே அணிந்தார். திரைப்படங்கள், நாடகங்களில் மற்ற ஆண்களுக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார். இறுதிவரை தனியாகவே வாழ்ந்து உயிரிழந்தார்.
36
Actress Nisha Noor
தமிழில் கல்யாண அகதிகள் மற்றும் "அவள் சுமங்கலி" உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நிஷா நூர். தமிழ் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களில் துணை நடிகையாக வலம் வந்த நிஷாநூர், தவறான வழிகாட்டுதலால் விபச்சாரத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலியில், தனது சொத்துக்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். எய்ட்ஸ் நோயாளியாக மாறிய அவர் தெருவில் அநாதை பிணமாக கிடந்தார்.
கோழிக்கூவுது படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜி. இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு அப்போல்லோ மருத்துவமனையில் முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால், விஜிக்கு காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது. மேலும் தற்காலிக பக்கவாதமும் ஏற்பட்டது. இதை யடுத்து விஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அறுவை சிகிச்சைக்கான பணத்தை திருப்பி அளித்த அப்போலோர் நிர்வாகம் வழக்கை முடித்து கொண்டது. பின்னர் மீண்டும் விஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமானார். எனினும் அவரால் இயல்பு நிலை வரமுடியவில்லை. இதனிடையே இயக்குனர் எம்.ஆர். ரமேஷ் உடன் காதல் தோல்வியும் விஜியின் வேதனையை அதிகப்படுத்தியது. இதனால் தற்கொலை செய்து உயிரை மாயத்துக் கொண்டார் விஜி. அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே.
தமிழ் மட்டுமினிற் தென்னிந்திய சினிமா முழுவதும் கோலோச்சி வந்தவர் சில்க் ஸ்மிதா. கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு பிசியான நடிகையாக வலம் வந்த அவர் கடன் தொல்லை, காதல் தோல்வி, நம்பிக்கை துரோகங்கள் என பல பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா. அப்போது அவரின் வயது 36 மட்டுமே. ல்கின் இறந்த உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த போது, பிணவரை ஊழியர்களே அவரின் உடலை பாலியல் வன்கொடுமை செய்தததாகவும் தகவல் வெளியானது. நீண்ட நாட்கள் இந்த கொடுமை அரங்கேறியது என்று அன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரவியது.
66
Actress Savithri
சாவித்ரி :
நடிகையர் திலகம் சாவித்ரி தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தார். உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தது. ஒருகட்டத்தில் ஜெமினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மதுப்பழக்கத்திற்கு ஆளானார் சாவித்ரி. தன் ரசிகர்கள், தன் பணியாளர்களுக்கும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கிய சாவித்ரி நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்தார். வீடு, வாசல் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். வறுமையில் வாடிய சாவித்ரி உடல் நலக்குறைவால் 19 மாதங்கள் கோமாவில் இருந்த அவர் கவனிப்பாரன்றி இறந்தார்.