
41 வயதை எட்டிய பின்னரும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் 20 வயது பெண் போல் யங் லுக்கில் கலக்கி வரும் நடிகை த்ரிஷாவின் திருமணம் நின்றது குறித்தும், அவர் பிரபல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அசிங்கப்பட்டது பற்றியும், பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷா சென்னையில் பிறந்து, எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்தவர். மேலும் 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை, மிஸ் சேலம் பேஜன்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மிஸ் இந்தியா 2001 போட்டியில் பியூட்டி ஃபுல் ஸ்மால் என தேர்வு செய்யப்பட்டார். மாடலிங் துறையில் கவனம் செலுத்திய படியே திரைப்பட வாய்ப்பை தேட தொடங்கிய த்ரிஷாவுக்கு ஆரம்பத்தில் 'ஜோடி' திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக சில நொடிகள் வந்து போகும் காட்சியில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட த்ரிஷா, இதைத்தொடர்ந்து அமீர் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'மௌனம் பேசியதே', மற்றும் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த 'மனசெல்லாம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், ராசி இல்லாத நடிகை என ஒரு சில விமர்சனங்களுக்கு ஆளானார்.
பின்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'சாமி' திரைப்படம் ராசி இல்லாத நடிகை என்கிற இவரின் அடையாளத்தை மாற்றியது. இப்படத்தை தொடர்ந்து லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, போன்ற படங்களில் நடித்தார். அதே போல் 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த 'கில்லி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பின்னர் ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே அதிகம் நடிக்க துவங்கினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசிய போது, நடிகை திரிஷா 30 வயதை கடந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது ,அப்போதைக்கு மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளானது மட்டும் இன்றி த்ரிஷாவை பணத்துக்காக அவருடைய அம்மா தான் திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுக்கிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த த்ரிஷாவின் அம்மா உமா என்னுடைய மகள் நடிகை என்றாலும் அவளுக்கு திருமணம் ஆகவேண்டும், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. நான் எப்படி அவள் திருமணத்தை தடுப்பேன் என அப்போதிக்கு உருக்கமான பேட்டி ஒன்றை கொடுத்ததாகவும், கூடிய விரைவில் த்ரிஷா திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என சபதம் எடுத்தது போல் அவர் சொன்னதாகவும் கூறப்பட்டது.
இதை அடுத்து பிரபல தயாரிப்பாளரும், மிகப்பெரிய கோடீஸ்வரருமான வருண் மனியனுக்கும் த்ரிஷாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களின் திருமணம் நின்று போனதற்கும் காரணமாக அமைந்ததாம். இது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவிய போது... இதுகுறித்து த்ரிஷா எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில், த்ரிஷாவின் அம்மா உமா "இது பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம், இந்த திருமணத்தை பெரியோர்களே நிறுத்திவிட்டதாகவும் மிகவும் கோபமாக செய்தியாளர்கள் முன் விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதை தொடர்ந்து நடிகை திரிஷாவின் திருமணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.
ஆனால் நடிகை த்ரிஷா பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்ததாகவும், அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறிய செய்யாறு பாலு, தெலுங்கு திரை உலகினரை பொறுத்தவரை எளிதில் தங்களின் குடும்பத்திற்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் ஒன்று கூடி த்ரிஷாவை எப்படியும் இந்த நடிகரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என முடிவு செய்து, அப்போதைக்கு அவர் நடித்த அனைத்து தெலுங்கு படங்களில் இருந்தும் வெளியேற்றியது மட்டுமின்றி, அவரையும் ஹைதராபாத் பக்கமே வரவிடாமல் தடுத்து ஆசைங்கப்படுத்தினார்களாம். அதன் பின்னரே த்ரிஷா அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார்.