மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கமுக்கமாக கல்யாணம் பண்ணிய பிரபல ஹீரோ... மயிலின் முதல் கணவர் இவரா?

Published : Aug 13, 2024, 12:52 PM ISTUpdated : Aug 13, 2024, 01:02 PM IST

போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டது தெரியும் ஆனால் அவருக்கு முன்பே ஒரு ஹீரோவுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றதாம்.

PREV
14
மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கமுக்கமாக கல்யாணம் பண்ணிய பிரபல ஹீரோ... மயிலின் முதல் கணவர் இவரா?
sridevi with rajini and kamal

1980-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் ட்ரீம் கேர்ள் ஆக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் மூன்று முடிச்சு படத்தில் தொடங்கியது ஸ்ரீதேவியின் திரைப்பயணம். முதல் படத்திலேயே ரஜினி, கமல் என இரு முன்னணி நடிகர்களுடன் நடித்தார் ஸ்ரீதேவி. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் அவர் நடித்த மயிலு கதாபாத்திரம் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கோலிவுட்டில் ஹிட் படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவிக்கு, தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வரிசைகட்டி வந்தன.

24
Sridevi Boney Kapoor

இதனால் அந்த காலகட்டத்திலேயே பான் இந்தியா நடிகையாக கொடிகட்டிப்பறந்தார் ஸ்ரீதேவி. 1980-களில் இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த ஸ்ரீதேவி, கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஜான்வி, குஷி என இரு மகள்களும் உண்டு. போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு இரண்டாம் தாரமாக ஸ்ரீதேவி வாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... இளையராஜா டைரக்ட் செய்ய இருந்த படம்.. ஹீரோவா நடிக்க ரஜினியே கால்ஷீட் கொடுத்தும் மிஸ் ஆனது எப்படி? ஆச்சர்ய தகவல்

34
Sridevi, Mithun chakravarthy

ஆனால் போனி கபூருக்கு முன்னரே ஸ்ரீதேவி பிரபல நடிகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டாராம். அந்த நடிகர் வேறுயாருமில்லை பாலிவுட்டில் சாக்லேட் பாய் ஆக இருந்து வந்த மிதுன் சக்ரவர்த்தி தானாம். இருவரும் 1980-களில் ரகசியமாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் அதை வெளிக்காட்டியதே இல்லை, ஏனெனில் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு யோகிதா என்கிற மனைவியும் இருந்து வந்தார்.

44
Sridevi, Mithun chakravarthy love

மனைவி இருக்கும் போதே ஸ்ரீதேவி உடன் ரகசிய உறவில் இருந்த மிதுன் சக்ரவர்த்தி கடந்த 1985-ம் ஆண்டு ஸ்ரீதேவியை கமுக்கமாக திருமணமும் செய்துகொண்டாராம். இதைப்பற்றி அறிந்த யோகிதா அந்த சமயத்தில் தற்கொலைக்கு முயன்றாராம். ஆனால் ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த யோகிதா, அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததா என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை நடந்திருந்தால் தற்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இருக்கிறேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்... 3 தடவ மஞ்சள் காமாலை வந்துச்சு; ஆனாலும் குடியை நிறுத்தல! மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்; கண்கலங்க பேசிய வனிதா

Read more Photos on
click me!

Recommended Stories