இளையராஜா டைரக்ட் செய்ய இருந்த படம்.. ஹீரோவா நடிக்க ரஜினியே கால்ஷீட் கொடுத்தும் மிஸ் ஆனது எப்படி? ஆச்சர்ய தகவல்

Published : Aug 13, 2024, 11:51 AM IST

இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா, ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார்.

PREV
14
இளையராஜா டைரக்ட் செய்ய இருந்த படம்.. ஹீரோவா நடிக்க ரஜினியே கால்ஷீட் கொடுத்தும் மிஸ் ஆனது எப்படி? ஆச்சர்ய தகவல்
Ilaiyaraaja

இசைஞானி இளையராஜா கடந்த 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து அவரின் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால், ஹீரோ, ஹீரோயினை புக் செய்யும் முன்னரே இளையராஜாவை புக் செய்ய தயாரிப்பாளர்கள் அந்த காலகட்டத்தில் வரிசைகட்டி காத்திருந்தார்களாம். அந்த அளவுக்கு அவரது பாட்டுக்கு மவுசு இருந்தது.

24
ilaiyaraja, rajinikanth

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆனாலும் இன்றளவும் பிசியான இசையமைப்பாளராகவே அவர் இருக்கிறார். அவர் கைவசம் விடுதலை 2 திரைப்படம் உள்ளது. வெற்றிமாறன் இயக்கும் அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி இசைஞானியில் வாழ்க்கையை மையமாக வைத்து இளையராஜா என்கிற பயோபிக் திரைப்படம் தயாராகி வருகிறது. தனுஷ் அதில் இளையராஜாவாக நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... 3 தடவ மஞ்சள் காமாலை வந்துச்சு; ஆனாலும் குடியை நிறுத்தல! மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்; கண்கலங்க பேசிய வனிதா

34
ilaiyaraaja says about rajinikanth

இந்நிலையில், இளையராஜா இயக்குனர் ஆகும் ஆசையில் இருந்தது பற்றி கெளதம் மேனனுடன் கலந்துகொண்ட நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது : ஒரு முறை ரஜினியே என்னிடம் வந்து என்னுடைய சகோதரர் பாஸ்கருக்கு படம் பண்ணி தருவதாகவும் அதை நீங்களே இயக்குங்கள் என கேட்டதோடு, அதற்கு நல்ல டைட்டில் வைக்குமாறும் கூறி இருந்தார். நானும் அதைக் கேட்ட உடன் ராஜாதி ராஜா என டைட்டில் வைக்க சொன்னேன்.

44
Ilaiyaraaja missed to direct Rajini Movie

ஏன் அந்த டைட்டில் என கேட்டார். நான் ராஜா, என்னைவிட பெரிய ஆள் நீங்கள் அதனால் ராஜாதி ராஜா என சொன்னேன். ரஜினியும் பெயர் நல்லாயிருக்குனு சொல்லி சந்தோஷப்பட்டார். ராமனாகிய நீங்க டைரக்ட் செய்ய, ராவணனாகிய நான் நடிக்கிறேன் சூப்பராக இருக்கும் என சொன்னார். உடனே நான் செட்டில் தான் யார் ராமன், யார் ராவணன் என தெரியும் என சொன்னேன். ஆனால் கடைசி வரை அந்த படத்தை என்னால் இயக்க முடியாமல் போனது என கூறி இருக்கிறார் இளையராஜா.

இதையும் படியுங்கள்... இயக்குனர்களோடு சண்டை... ஆளவிடுறா சாமினு படத்தை பாதியில் கைவிட்டு எஸ்கேப் ஆன நடிகர்கள் லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories