
கோலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா. நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர் தான் வனிதா, தன் தந்தை விஜயகுமார் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார் வனிதா. ஒரு முறை விமான நிலையத்தில் வனிதா உடன் சண்டையிட்டு அவரது மகன் ஸ்ரீஹரியை விஜயகுமார் அழைத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தன் தந்தை பற்றியும் குடும்பத்தினர் மீதும் வனிதா விஜயகுமார் மீடியாவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை யாராலும் மறந்திருக்க முடியாது.
விஜயகுமாரை தொடர்ந்து வனிதா மீது அன்பாக இருந்த அவரது தாய் மஞ்சுளாவும், மகளுக்கு எதிராக பேசத் தொடங்கினார். வனிதா தனது மகளே இல்லை அவள் ஒரு ராட்சசி. அவ என் வயித்துல பிறந்ததை நினைக்கும்போதே ரொம்ப கேவலமா இருக்கு என்றெல்லாம் மஞ்சுளா திட்டித்தீர்த்தார். இதன்பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு வனிதாவின் தாயார் மஞ்சுளா மரணமடைந்தார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவிடாமல் வனிதாவை விஜயகுமார் குடும்பம் தடுத்தது பெரும் பிரச்சனையானது.
இதனிடையே ஷகீலா உடனான யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார், தன் தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் ஒருநாள் மஞ்சுளா அம்மா தன்னை வீட்டு அழைத்ததாகவும், அவரின் அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்றதும் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுததாக வனிதா கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நடிகை நயன்தாராவுக்காக ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?
தொடர்ந்து அந்த பேட்டியில், தனது தாய் மஞ்சுளாவின் மதுப்பழக்கம் பற்றி பேசிய வனிதா, அவருக்கு 3 தடவ மஞ்சள் காமாலை வந்தும் அவர் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை என கூறிய வனிதா, ஒருமுறை செம்ம போதையில் வந்து மஞ்சுளா அம்மா பேட்டி அளித்ததை இந்த ஊர், உலகமே பார்த்தது என தெரிவித்துள்ளார். 72 மணிநேரத்தில் இறந்துவிடுவோம் என தெரிந்ததும், என்னிடம் சில ரகசியங்களை மஞ்சுளா பகிர்ந்துகொண்டதாக கூறிய வனிதா, அவை என்ன என்பதையும் அந்த நேர்காணலில் விவரித்துள்ளார்.
இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து, அனைத்து சொத்து பத்திரங்களிலும் என் பெயரை சேர்க்குமாறு கூறினார். அதுமட்டுமின்றி தான் பல உண்மைகளை சொல்லப்போகிறேன், அதனை வீடியோவாக எடு என என்னிடம் கூறினார். ஆனால் நான் அதை செய்ய மறுத்துவிட்டேன். அதுமட்டுமின்றி எனது தந்தையிடமும் வனிதாவை விட்றாதீங்க என என் தாய் சொன்னார்.
மஞ்சுளா அம்மா இறந்த பின்னர் என்னை அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய விடாமல் தடுத்தார்கள். அப்போது சரத்குமார் மற்றும் ராதாரவி அங்கிள் தான் என்னை அழைத்து அம்மாவுக்கு இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர். அன்றைக்கு மட்டும் அவர்கள் இல்லையென்றால் எனது தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாமல் போயிருக்கும் என வனிதா அந்த நேர்காணலில் கண்கலங்கியபடி எமோஷனலாக பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நடிகை ஶ்ரீதேவியின் கடைசி நிமிட போட்டோஸ்!- முதன்முறையாக மனம் திறந்த போனிகபூர்! நடந்தது என்ன?