நடிகை நயன்தாராவுக்காக ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

First Published | Aug 13, 2024, 9:06 AM IST

கஜினி படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை நயன்தாராவுக்காக சூர்யா ஷூட்டிங்கை நிறுத்தி உள்ளார். ஏன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Suriya

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

எனினும் தனது ஆரம்ப நாட்களில் நடிப்பு, டான்ஸ் ஆகியவற்றுக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது நந்தா தான். இந்த படத்தில் தன்னை தானே செதுக்கிக் கொண்ட சூர்யா பாலாவின் நந்தா படத்தின் மூலம் தன்னை விமர்சித்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் சூர்யா.

Tap to resize

இதை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் மூலம் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். காக்க காக்க மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சூர்யா. பாலா இயக்கத்தில் வெளியான பிதா மகன் படத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறினார்.

ஆயுத எழுத்து, கஜினி, ஆறு, சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், 7-ம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 
கடைசியாக விக்ரம் படத்தில் ரோலாக்ஸாக மிரட்டிய சூர்யா ராக்கெட்ரி தி நம்பி எஃபெகட் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

suriya starrer ghajini was rejected by r madhavan

கஜினி படத்தின் போது சூர்யா செய்த செய்த ஒரு செயல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கஜினி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்த போது சூர்யா திடீரென படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார்.

Ghajini

2 சீன்களை எடுத்து முடித்து 3-வது சீனை எடுத்துக் கொண்டிருந்த போது சூர்யா இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் சென்று சீனில் திருத்தம் இருப்பதாக கூறி படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார். அப்போது இயக்குனர் சூர்யாவிடம் டயலாக்கை மறந்துட்டீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சூர்யா, நான் டயலாக்கை மறக்கவில்லை. கொஞ்சம் மானிட்டரை பாருங்க என்று கூறியுள்ளார். அப்போது நயன்தாராவின் உடை கொஞ்சம் கிளாமராக இருந்துள்ளது.

Latest Videos

click me!