
மோதலும் காதலும் நிறைந்தது தான் சினிமா, அது ரீல் லைஃப் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் பொருந்தும். ஏனெனில் சினிமாவில் ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையே ஒத்துப்போனால் அந்தப் படம் நல்ல படியாக வரும். ஒருவேளை இயக்குனரோடு மோதல் ஏற்பட்டு இருவரும் வேண்டாவெறுப்பாக இணைந்து பணியாற்றினால் அந்த படத்தின் ரிசல்ட் நினைத்தபடி வராது. அப்படி கோலிவுட்டில் சண்டை போட்டு பிரிந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.
சூர்யா vs ஹரி
ஹரி - சூர்யா இருவருமே கோலிவுட்டில் ஹிட் காம்போவாக இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து வேல், ஆறு, சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் பணியாற்றி இருந்தனர். அதிலும் இவர்கள் காம்போவில் வெளிவந்த சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் சக்கைப்போடு போட்டன. இதையடுத்து சிங்கம் 4ம் பாகத்திற்காக தயார் ஆனாராம் ஹரி, ஆனால் சூர்யா வேறு கதை கேட்க, அவர் அருவா என்கிற தலைப்பில் ஒரு படத்தை அறிவித்தார். ஆனால் அந்த சமயத்தில் சூர்யாவுக்கும் ஹரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அருவா படத்தை பாதியிலேயே கைவிட்டனர்.
விஷால் vs மிஷ்கின்
மிஷ்கின் - விஷால் இருவரும் துப்பறிவாளன் படத்தில் இணைந்து பணியாற்றினர். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவானது. அதற்கான ஷூட்டிங்கும் லண்டனில் நடைபெற்றது. கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் அப்படத்தை டிராப் செய்தனர். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கு பேசினர். இயக்குனர் மிஷ்கின் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது விஷாலை பொறுக்கி என திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மிஷ்கினை துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து நீக்கிவிட்டு அப்படத்தை விஷாலே இயக்கி நடிக்க தயாராகி வருகிறார்.
இதையும் படியுங்கள்... அவ நாய் ஆக பிறக்கட்டும்... சமந்தா பற்றி நாக சைதன்யாவின் 2வது மனைவி சோபிதா துலிபாலா போட்ட பதிவு வைரல்
சூர்யா vs பாலா
சூர்யாவின் கெரியரில் மிக முக்கிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். அவர் இயக்கிய நந்தா, பிதாமகன் படத்தின் நடித்த பின்னர் தான் சூர்யாவின் மார்க்கெட் எகிறியது. பிதாமகன் படத்துக்கு பின் சுமார் 18 ஆண்டுகளாக பணியாற்றாமல் இருந்த சூர்யா - பாலா காம்போ, கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் இணைந்து வணங்கான் படத்தை அறிவித்தது. அப்படத்தின் ஷூட்டிங்மும் ஒரு மாதம் நடைபெற்றது. ஷூட்டிங்கில் சூர்யாவை பாலா தரக்குறைவாக நடத்தியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதோடு அப்படத்தில் இருந்தும் வெளியேறினார் சூர்யா. அதன்பின்னர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார் பாலா.
விக்ரம் vs பாலா
சியான் விக்ரமிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்த இயக்குனர் என்றால் அது பாலா தான். அவர் இயக்கிய சேது படம் தான் விக்ரமின் முதல் வெற்றிப்படமாகும். அதன்பின்னர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார் விக்ரம். இப்படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாலா உடன் பணியாற்றாமல் இருந்த விக்ரம், தன்னுடைய மகன் அறிமுகம் ஆகும் படத்தை பாலா இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அர்ஜுன் ரெட்டி என்கிற தெலுங்கு படத்தை தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்தனர். அப்படத்தின் அவுட்புட் பார்த்து அப்செட் ஆன விக்ரம், பாலா உடன் சண்டை போட்டதோடு அப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் கைவிட்டார்.
அஜித் vs பாலா
பாலா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் நான் கடவுள். அப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அப்படத்தில் முதலில் நடிக்க கமிட்டானது நடிகர் அஜித் தான். அதற்காக நீளமாக முடியெல்லாம் வளர்த்து வந்தார் அஜித். ஆனால் ஒரு கட்டத்தில் பாலா உடன் மோதல் ஏற்பட்டது. அப்போது பாலா ஓட்டல் அறையில் அஜித்தை அடித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் நான் கடவுள் படத்தில் இருந்து வெளியேறினார் அஜித்.
இதையும் படியுங்கள்... ஸ்பாடிபையில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் இந்திய நட்சத்திரம்.. ஏ.ஆர் ரஹ்மான் இல்லை.. அனிருத் இல்லை..