அவ நாய் ஆக பிறக்கட்டும்... சமந்தா பற்றி நாக சைதன்யாவின் 2வது மனைவி சோபிதா துலிபாலா போட்ட பதிவு வைரல்

First Published | Aug 13, 2024, 7:41 AM IST

நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா துலிபாலா, சமந்தா பற்றி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

Sobhita Dhulipala Naga Chaitanya

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் சோபிதா துலிபாலா. அப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்கிற கேரக்டரில் நடித்த அவர், தற்போது பாலிவுட், ஹாலிவுட் என செம்ம பிசியாக நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் உலா வந்த நிலையில், அவர்களே கடந்த வாரம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Sobhita Dhulipala Naga Chaitanya engagement

சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கு, கடந்த வாரம் சோபிதா உடன் திருமணம் நிச்சயம் ஆனது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். சோபிதா - நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இருவரின் காதல் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபுறம் சோபிதா போட்ட பழைய இன்ஸ்டா பதிவுகள் ஒவ்வொன்றாக வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... புதுசா கட்டின வீடு மட்டும் 1.8 கோடி.. இப்போ நான் வாங்குற சம்பளம்.. மனம் திறந்த ஆல்யா மானசா - வெயிட்டு கை தான்!

Tap to resize

Sobhita Dhulipala Lover Naga Chaitanya

அந்த வகையில் தன் பெற்றோர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பா மற்றும் அம்மா தான் எனக்கு பெற்றோராக வர வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றதெல்லாம் எனக்கு தேவையில்லை. என் தங்கை சமந்தா நாயாகவோ அல்லது வேறேதுவுமாக பிறக்கட்டும். அது பரவாயில்லை” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமந்தா நாய் ஆக பிறக்கட்டும்னு சொல்லிவிட்டாரே என கூறி வைரலாக்கி வருகின்றனர்.

Sobhita Dhulipala insta post

சோபிதாவுக்கு சமந்தா என்கிற சகோதரி இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தன் சகோதரி பற்றி சோபிதா துலிபாலா போட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றது. அதே வேளையில் நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யாவை பிரிந்ததற்கு சோபிதா தான் காரணம் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகி புயலை கிளப்பி இருக்கிறது. சமந்தாவை பிரியும் முன்னரே சோபிதா உடன் நாக சைதன்யா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இப்போ தான் சினிமா.. அதுக்கு முன்னாடி நாங்க வேற மாதிரி Players தெரியுமா? ஸ்போர்ட்ஸ் to சினிமா வந்த பிரபலங்கள்!

Latest Videos

click me!