இப்போ தான் சினிமா.. அதுக்கு முன்னாடி நாங்க வேற மாதிரி Players தெரியுமா? ஸ்போர்ட்ஸ் to சினிமா வந்த பிரபலங்கள்!
Cine Celebrities : இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் பலர், கலைத்துறைக்கு வருவதற்கு முன்பாக பெரிய அளவில் பல விதமான விளையாட்டுகளில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
genelia
இன்று தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் க்யூட் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜெனிலியா. இவருடைய அசத்தலான நடிப்பு குறித்து நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் இளம் வயது முதல் இவர் ஒரு மிகச் சிறந்த தடகள வீராங்கனை என்பது பலர் அறியாத உண்மை. பல்வேறு பதக்கங்களையும் இவர் பெற்றுள்ள நிலையில், சில காலம் வாலிபால் பிளேயராகவும் ஜெனிலியா வலம்வந்துள்ளாராம்.
deepika padukone
ஹிந்தி திரையுலகை தற்போது ஆட்சி செய்து வரும் பிரபல நடிகை தீபிகா படுகோனே, ஒரு மிகச்சிறந்த பேட்மிட்டன் ப்ளேயர் ஆவார். மாநில அளவில் பல போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே உலக புகழ்பெற்ற ஒரு பேட்மிட்டன் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
harbhajan
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை மிகச் சிறப்பான ஸ்பின் பவுலராக அசத்தி வந்தவர் தான் ஹர்பஜன் சிங். ஒரு கட்டத்தில் முழுநேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், சில காலம் அரசியல் தலைவராகவும் பயணித்து வந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களிலும், இணைய தொடர்களிலும் இப்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார்.
yogi babu
விளையாட்டுத்துறையில் பெரிய அளவில் பதக்கங்களோ அல்லது வெற்றிகளோ பெறவில்லை என்றாலும், இன்று திரைத்துறையில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் யோகி பாபுவும் ஒரு காலகட்டத்தில் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் மேன் தான். அவர் கால்பந்தாட்ட வீரராகவும், கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.