
தமிழ் சினிமாவில், அல்டிமேட் நாயகனாக இருக்கும் அஜித் திரைப்படத்துறை மட்டுமின்றி பல்வேறு விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் விமானம் ஓட்ட முறையாக பயிற்சி பெற்று, அதற்கான உரிமத்தையும் வைத்துள்ளார். இவரை தொடர்ந்து பிரபல மூத்த நடிகை, ஒருவரும் விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் வேறு யாரும் அல்ல... தமிழில் கமல் - ரஜினி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை மாதவி தான்.
ஆந்திர மாநிலம், எள்ளுரை சேர்ந்தவர் தான் நடிகை மாதவி. 1976 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், பின்னர் அடுத்தடுத்து மற்ற தென்னிந்திய மொழிகளான, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில், புதிய தோரணைகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இரண்டே வருடத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார். குறிப்பாக, 1981 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் தமிழில் 9 படங்கள் வெளியாகியது. அந்த அளவுக்கு படு பிஸியான நடிகையாக மாறினார். 1981-ஆம் ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்த தில்லுமுல்லு, கர்ஜனை, கமல்ஹாசனுடன் நடித்த ராஜபார்வை, டிக் டிக் டிக், போன்ற படங்கள் வெளியாகின.
பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வந்ததால், தமிழில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஆனால் இவரை தேடி தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருந்தன. இவர் கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிசய பறவை படத்தில், ரம்பையாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் ஆகும் வரை தெலுங்கு படங்களில் நடித்தார். அந்த காலத்திலேயே பிகினி உடை அணிந்து மிகவும் போல்டாக நடித்தவர் நடிகை மாதவி என்பது குறிப்பிடத்தக்கது.
41 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் நடிகை த்ரிஷாவின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?
நடிகை மாதவி அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ரம்பால் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார். இவருக்கு தற்போது மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பேருமே தங்களின் படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய மகள்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மாதவி.
திருமணத்திற்கு பின்னர், தன்னுடைய கணவருக்கு - குழந்தை என பொறுப்பான குடும்ப தலைவியாக மாறி விட்டாலும்.. தன்னுடைய கணவரின் தொழில் ரீதியான சாம்ராஜ்யத்தையும் அவருக்கு உதவியாக ஆண்டு வருகிறார். மனைவி ஆசைப்பட்ட அனைத்தையும் செய்யும் இவருடைய கணவர் ரம்பால் ஷர்மா, தன்னுடைய மனைவிக்கு முறையான விமான ஓட்ட பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து, மாதவிக்கு விமானம் ஊட்டுவதற்கான உரிமம் பெற உறுதுணையாக இருந்துள்ளார். மேலும் மாதவிக்கு ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். இதன் மூலம் தல அஜித்துக்கு பின்னர், விமானம் ஓட்ட உரிமம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ளார் மூத்த நடிகை மாதவி என்பது குறிப்பிடத்தக்கது.