போட்ரா வெடிய... 'GOAT' ட்ரைலர் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த ஹாட் அப்டேட்! தெரியவிடும் ரசிகர்கள்!

First Published | Aug 12, 2024, 8:28 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தின் டிரைலர் குறித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள பதிவு தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 

Actor Thalapathy Vijay The GOAT Movie

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள, கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். பிகில் படத்திற்கு பின்னர் விஜய், அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Vijay pair is sneha

இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை சினேகா நடித்துள்ளார். இதன் மூலம் பல வருடங்களுக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். அதேபோல் மகன் விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இவர்களை தவிர நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், லைலா, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

அனு ஹாசன், லைலா என வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்! யார் யார் தெரியுமா?
 

Tap to resize

Vijayakanth AI Scene

அதேபோல மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் இந்த படத்தில் தோன்றுவது போல் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் சில காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், தங்களின் அனுமதியின்றி விஜயகாந்தின் புகைப்படமோ அல்லது வீடியோ காட்சிகளோ திரைப்படங்களில் இடம்பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். எனவே விஜயகாந்த் குடும்பத்தில் அனுமதி பெற்று இந்த காட்சிகள் இடம் பெறுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

Trailer Release update

இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் பரபரப்பாக நடந்து. அந்த வகையில் இதுவரை யுவன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்,  மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் அதிக விமர்சனங்களுக்கு ஆளானது.

கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய நடிகை! அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நாயகி!

GOAT Movie Budjet:

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஒரு சயின்ஸ் பிக்சன், ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி  உள்ளார். இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட கதைகளத்தில் உருவாக்கி உள்ள இப்படத்தில்,  ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் விஜயின் இளம் வயது கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
 

இது குறித்து அவர் போட்டு உள்ள பதிவில்... "உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள் மற்றும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள்.  நாளை உங்களுக்கு சரியான தகவலை தருகிறேன் என கூறியுள்ளார். எனவே கூடிய விரைவில் இப்படத்தின் ட்ரைலர்  தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில்... தங்களால் வெயிட் பண்ண முடியவில்லை, சீக்கிரம் வெளியிடுங்கள் என கமெண்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

அம்மா நயன் அரவணைப்பில் சிக்கிய உயிர் - உலகம்! வேலைக்கு செல்வதற்கு முன்.. அழகிய தருணத்தின் புகைப்படங்கள்!

Latest Videos

click me!