அனு ஹாசன், லைலா என வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்! யார் யார் தெரியுமா?

First Published | Aug 12, 2024, 7:33 PM IST

வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிரபல தமிழ் பட நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

anu haasan

உலக நாயகன் கமலஹாசனின் அண்ணன் மகளும், சுஹாசினினின் சகோதரியுமான, நடிகை அனுஹாசன் 1995 ஆம் ஆண்டு, தன்னுடைய அக்கா சுஹாசினி இயக்கிய 'இந்திரா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆலவந்தான், படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மேலும் ரன், நல தமயந்தி, ஆஞ்சநேயா, போன்ற படங்களில் அக்கா, அண்ணி, போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அனுஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காபி வித் அனு' என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், வெளிநாட்டை சேர்ந்த கிரஹாம் ஜெ என்கிற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவரை, காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளனர் உள்ளார்.

Ileana

அதேபோல் பிரபல நடிகை இலியானாவும், வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு, கருப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். அண்மையில் தான் தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை இலியானா கொண்டாடினார். இலியானா தமிழில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தெலுங்கு திரை உலகில் அதிக கவனம் செலுத்தினார். ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீப காலமாக ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய நடிகை! அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நாயகி!
 

Tap to resize

weding shreya saran Andrei Koscheev

பிரபல நடிகை ஸ்ரேயா சரணும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரீவ் கோர்ஸ்சே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ராதா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா, பின்னர் தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' என்கிற திரைப்படத்தில் ஹீரோவின் தோழியாக நடித்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போன்ற மொழிகளில் கவனம் செலுத்தினாலும்... தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். குறிப்பாக தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி தி பாஸ், விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமி, சிம்புவுக்கு ஜோடியாக AAA போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
 

Laila

இவரை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை லைலா,  இராணியன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மெஹந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லைலா, விக்ரம், சூர்யா, அஜித், சரத்குமார், போன்ற ஹீரோக்களுடன் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய லைலா,  கடந்த 2022 ஆம் ஆண்டு, கார்த்தி நடிப்பில்  வெளியான சர்தார் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் லைலா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' மற்றும் 'சப்தம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஞானவேல் ராஜாவுக்கு செக் வைத்த நீதிமன்றம்! 'தங்கலான்' மற்றும் 'கங்குவா'.. குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகுமா?

Gangopadhyay husband Joe Langella

அதேபோல் தெலுங்கில் லீடர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மயக்கம் என்ன, சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரிச்சா கங்கோ பத்தியாயா தன்னுடன் வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் எம் பி ஏ படித்த நண்பர் ஜோ ரங்கீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவைச் சேர்ந்த இவரை திருமணம் செய்த பின்னர் அங்கேயே செட்டில் ஆனார். இவர் சினிமாவில் இவரை பற்றிய சில வதந்திகள் பரவியதால் முழுமையாக சினிமாவை விட்டு முடிவு செய்ததாக கூறப்பட்டது.

Priyanka Chopra:

நடிகை பிரியங்கா சோப்ரா, பெரும்பாலும் அதிகப்படியான பாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இவரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் நிக்ஜோனஸ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், சரக்கேசி முறையில் மால்டி மேரி என்கிற பெண் குழந்தைக்கும் தாயானார்.

41 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் நடிகை த்ரிஷாவின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?
 

Radhika Apte:

பிரபல பாலிவுட் நடிகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக 'கபாலி' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே, லண்டனைச் சேர்ந்த பெனிடிக் டைலர் என்பவரை காதலித்து 2012-ஆம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் லண்டனை சேர்ந்தவர் என்பதால், அவ்வபோது தன்னுடைய கணவரை பார்க்க ராதிகா ஆப்தே லண்டன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!