கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய நடிகை! அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நாயகி!

Published : Aug 12, 2024, 06:01 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரில் இருந்து, பிரபல நடிகை விலகிவிட்டதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

PREV
16
கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய நடிகை! அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நாயகி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரில் இருந்து, பிரபல நடிகை விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

26
Karthigai deepam serial

பெங்காலி தொடரான 'கிருஷ்ணா கோலி' என்கிற சீரியலின் தமிழ் ரீமேக்காக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வருகிறது கார்த்திகை தீபம் தொடர். இந்த தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ், ஜீ தமிழில் பிரபலமான 'செம்பருத்தி' போன்ற தொடர்களில் நடித்த நாயகன் கார்த்திக் ராஜ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இதென்ன பாகுபலில வர்ற காலக்கேயர்கள வச்சு தனி படமா எடுத்திருக்காங்க! கங்குவா டிரைலரும்; நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்
 

36
Karthigai deepam serial

இவருக்கு ஜோடியாக ஆத்திகா என்பவர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கார்த்திக் ராஜுடன் இணைந்து பிளாக் அண்ட் வொயிட் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர்.
 

46
Karthigai deepam serial

தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், மீரா கிருஷ்ணன், மதுமோகன், மோகன் ராமன்,  ரியா சௌத்ரி, ரேஷ்மா, தினேஷ் கோபாலசுவாமி, நந்திதா ஜெனிபர், விமல் குமார், போன்ற பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இந்து தொடரில் எதிர்நீச்சல் பிரபலமான விமல் குமார், ரமேஷ் என்கிற கதாபாத்திரத்தில் இணைந்த நிலையில்... தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுபரக்ஷனா  இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஞானவேல் ராஜாவுக்கு செக் வைத்த நீதிமன்றம்! 'தங்கலான்' மற்றும் 'கங்குவா'.. குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகுமா?
 

56

இவர் 'கார்த்திகை தீபம்' சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து, எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,  அவருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் வானத்தைப்போல, ஈரமான ரோஜாவே 2, போன்ற ஏராளமான சீரியல்களில் வில்லி வேடத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66
Karthigai deepam serial

ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சுபரக்ஷனாவின்  இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், அவருக்கு பதிலாக கமிட் ஆகியுள்ள சாந்தினி பிரகாஷ் வில்லி ஐஸ்வர்யா வேடத்திற்கு சரியான தேர்வு என கூறி வருகிறார்கள். அப்படி ஒரு வில்லனாதனத்தை இவர் வெளிப்படுத்துவார் இவர்.

எம்.ஜி.ஆரால் நடுத்தெருவுக்கு வந்த சந்திர பாபு! சாவித்திரியால் மொத்தமும் போச்சு.! நெஞ்சை உருக்கும் Flash Back!

Read more Photos on
click me!

Recommended Stories