திறந்து பார்த்தால் அசைவப் பொருட்கள் ஏராளம். வாருங்கள் சாப்பிடலாம் என்றார். அண்ணா நீங்கள் சாப்பிடுங்கள். நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னேன். ஏன் என்று கேட்டார். இன்று சனிக்கிழமை என்று சொன்னேன். ஆம், இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை. அதனால் என்ன? இல்லைங்க வெங்கடேசப் பெருமானின் பக்தியின் காரணமாக சனிக்கிழமையன்று அசைவம் சாப்பிடுவதில்லை.