Hanksika : “இதே போல எப்பவும் ஹேப்பியா இருக்கணும் கடவுளே..” ஹன்சிகாவின் பர்த்டே கிளிக்ஸ் இதோ..

Published : Aug 12, 2024, 03:48 PM IST

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
17
Hanksika : “இதே போல எப்பவும் ஹேப்பியா இருக்கணும் கடவுளே..” ஹன்சிகாவின் பர்த்டே கிளிக்ஸ் இதோ..
Hansika Latest Photos

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் ஹன்சிகா. 2010-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஜெயம் ரவி நடிப்பில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ஹன்சிகா..

27
Hansika Latest Photos

இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ஹன்சிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன்படி வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, மாண் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன், சிங்கம் 3, புலி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

37
Hansika Latest Photos

ஹன்சிகாவின் வசீகர தோற்றமும், அவரின் நடிப்பும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் பிசியான நடிகையாக மாறிய அவர் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் 

47
Hansika Latest Photos

இதனிடையே  மீண்டும் பாலிவுட்டில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழிலும் ரௌடி பேபி, கார்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

57
Hansika Latest Photos

தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2022-ம் ஆண்டு இந்த ஜோடி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். 

67
Hansika Latest Photos

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர். இவருக்கு சுமார் 70 லட்சம் ஃபோலோ செய்து வருகின்றனர். தனது போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

77
Hansika Latest Photos

அந்த வகையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

click me!

Recommended Stories