இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். காதலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் சுகேஷ் சந்திரசேகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டு தேர்வு செய்த சொகுசுப் படகை இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக கொடுப்பதாக தெரிவித்துள்ளார். 'லேடி ஜாக்குலின்' எனப் பெயரிடப்பட்ட அந்த படகு இன்னும் இரு வாரங்களில் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துளார். அந்த படகுக்கான அனைத்து வரிகளும் கட்டப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளா்.
மேலும் அக்கடிதத்தில், `மை டியர் பேபி,மை பொம்மா" எனக் கூறி, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளர். ஜாக்குலின், இந்த ஆண்டில், அனைத்திலும் வெற்றி பெற்று, உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார் .